நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா Published by Loga Dharshini on 2021-01-27 18:15:57 நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Tags நல்லூர்க் கந்தன் ஆலயம் நெற்கதிர் அறுவடை விழா முருகப்பெருமான் திருவருள் தைப்பூசத் தினம்