முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில், இன்றுகாலை(27.01.2021) பெறுதியான வலம்புரி சங்கினை விற்பனைக்காக கொண்டு வந்த வத்தளை பகுதியை சேர்ந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த வலம்புரி சங்கின் பெறுமதி தொடர்பில் மதிப்பிடபடவுள்ளதுடன், கைதான இருவரிடம் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், கைதான இருவரையும் வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.