அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் ஆதரவு வழங்கியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக மெல்பேர்னுக்கு சென்றுள்ள அனைத்து வீரர்கள் உட்பட ஏனைய பணியாளர்களுக்கும் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும்.

இந் நிலையில் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் முறையினை பல வீரர்கள் விமர்சித்து வந்த நிலையில்  அவுஸ்திரேலிய ஓபன் தொடரை முன்னிட்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுக்கும் கொவிட் -19 க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடால்,

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து வீரர்களும் தங்களுடன் வரும் ஊழியர்களுடன் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

இது வழக்கத்தை விட வித்தியாசமான சூழ்நிலை, இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது.  அவுஸ்திரேலியாவிற்கு வந்து இருந்த 72 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

தனிமையில் இருக்கும் வீரர்களுக்கு தாம் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.