கினி வளைகுடாவில் ஒரு கொள்கலன் கப்பல் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அசர்பைஜான் குழு உறுப்பினரின் உடல் துருக்கிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் புதன்கிழமை அசர்பைஜானுக்கு அனுப்பப்பட்டது.

சடலம் காபோனின் தலைநகரான லிப்ரெவில்லிலிருந்து இஸ்தான்புல்லுக்கும் பின்னர் துருக்கிய ஏயர்லைன்ஸ் விமானம் மூலம் அசர்பைஜான் தலைநகர் பாகுக்கும் அனுப்பப்பட்டது.

சனிக்கிழமை கடற்கொள்ளையர் முன்னெடுத்த தாக்குதலில், குறித்த சரக்குக் கப்பலின் 19 ஊழியர்களில் 15 பேர் கடத்தப்பட்டனர், அதே நேரத்தில் ஒரு அசர்பைஜான் நாட்டவரும் கொல்லப்பட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து, லைபீரிய-கொடியிடப்பட்ட மொஸார்ட் என்ற கப்பல் ஞாயிற்றுக்கிழமை போர்ட்-ஜென்டில், காபோனில் நங்கூரமிட்டது.

ஆனால் அதில் இருந்த மூன்று குழு உறுப்பினர்கள் மட்டுமே கப்பலில் இருந்தனர்.

கடத்தப்பட்ட 15 மாலுமிகள் அனைவரையும் திரும்பப் பெற துருக்கி தன்னால் முடிந்த அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.