ஜெனிவா தீர்மானங்கள் இலங்கையின் சுயாதீனத்தை பாதித்து விடக்கூடாது: அரசாங்கம் திட்டவட்டம்

By J.G.Stephan

27 Jan, 2021 | 01:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)
இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள்  இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய  மூவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல், குற்றங்கள் ஒருவேளை இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உள்ளக பொறிமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எடுக்கும் தீர்மானங்கள் நாட்டின் அரசியலமைப்பிற்கும், சுயாதீனத்தன்மைக்கும்  உட்பட்டதாக  இருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம் பெற்றதாக காலகாலமாக இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் பல அமைப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன் பின்னர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அரங்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில்  ஆராய உள்ளக மட்டத்தில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. யுத்தம் இடம்பெற்ற நாட்டில்  யுத்த சூழல் தொடர்பிலான அறிக்கையை குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்வது இலகுவான காரியமல்ல.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முற்படும் வேளை, துரதிஷ்டவசமாக 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நோக்கத்துக்கு அமைய செயற்பட்டது. இலங்கைக்கெதிராக  அமெரிக்கா மற்றும்  ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் கொண்டு வந்த 30.1 பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரச தலைவருக்கும் பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்குவதாக ஒப்புதல் வழங்கினார். இச்செயற்பாடு நாட்டை காட்டிக் கொடுக்கும் தேசதுரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.

2019ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துக் கொண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30.1 பிரேரணை இலங்கையின் அரசியமைப்பிற்கும், சுயாதீனத் தன்மைக்கும் முரணானது என  சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரசாங்கத்தில் மனித உரிமை பேரவை தொடர்பான கூட்டத்தொடர் இரு வேறுப்பட்ட தன்மையினை கொண்டதாக அணுகப்பட்டுள்ளது.என்பதை இரண்டு வெளிவிவகார அமைச்சர்களின் செயற்பாடுகள் ஊடாக அறிந்துக் கொள்ள முடியும்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை குற்றங்கள் இடம்பெற்றதாக குறிப்படப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய ஜனாதிபதியால் மூவரடங்கிய விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58
news-image

வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

2022-12-08 13:31:04