இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஏழாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.

அருந்திக்க பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனையினை மேற்கொண்டுள்ளார். அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

முன்னதாக அமைச்சர்ளான வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியால் நிஷாந்த டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், வசந்த யாபா பண்டார ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.