பிரபல சிங்கள நடிகர் விஜய நந்தசிறி தனது 72 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தெற்கில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இன்று காலமாகியுள்ளார்.

1944 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் விஜய நந்தசிறி, பல மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

புகழ்பெற்ற சிங்கள மேடைநாடகங்களான மனமே மற்றும் சிங்கபாகு ஆகிய மேடை நாடகங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.