நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த விடுவிக்கப்படுவதாக கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.