(இராஜதுரை ஹஷான்)

புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையுடன் தற்போது தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் துறைமுக உட்பிரவேச அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புதிய களனிப் பாலம் தொடக்கம் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சாத்திய வள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நிர்மாணித்து நடாத்திச் சென்று ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் 100 சதவீத வெளிநாட்டு நிதியுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு விண்ணப்பங்களை  கோருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.