கிழக்கு முனையத்தை பாதுகாக்க வீதிக்கிறங்கி போராடவும் தயார் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Published By: Digital Desk 4

26 Jan, 2021 | 09:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வீதிக்கிறங்கி போராடவும் தயார். தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கமாட்டோம் என்ற கொள்கையை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என அபயராம  விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொரோனா சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்தும் செயற்படுத்தப்பட  வேண்டும்: முருந்தெட்டுவே ஆனந்த தேரர் | Virakesari.lk

அபயராம விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதால் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி மீது நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.

தேசிய வளங்களை பிறநாட்டவர்களுக்கு தாரை வார்ப்பது  தேசதுரோக செயற்பாடு என சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விவகாரத்தை கொண்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியபோது வீதிக்கிறங்கி போராடினோம். அப்போது இருந்த வலிமை தற்போதும் உள்ளது.ஆகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க வீதிக்கிறங்கி போராடவும் தயாராகவுள்ளோம்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்கு மகாசங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.பௌத்த மத தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்கு உண்டு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43