வனஇலாகா மக்களின் காணிகளுக்கு எல்லைக்கல் இடுவதில் காட்டும் அவசரத்தினை, காணிகளை விடுவிப்பதில் காட்டுவதில்லை - ரவிகரன்

Published By: Digital Desk 3

26 Jan, 2021 | 07:24 PM
image

வனவளத்திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளுக்கு எல்லைக்கற்களை இட்டு, அக்காணிகளை அபகரிப்பதில் காட்டுகின்ற அவசரத்தினை, எல்லைக்கற்களை அகற்றி மக்களுக்கு காணிகளை விடுவிப்பதில் காணமுடியவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26.01.2021) இடம்பெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வனவளத் திணைக்களம் காணிகளுக்கு எல்லைக்கற்களை இடும்போது பிரதேசசெயலகத்திடமிருந்து பெரும்பாலும் அனுமதிகளைப் பெறுவதில்லை. அத்தோடு காணிகள் தொடர்பில்  பொதுமக்களிடமோ, கிராம   அலுவலர்களிடமும் ஆராய்வதில்லை.

ஒருமுறை மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில், வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தம்மால் 15,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளுக்கு எல்லைக்கற்களை இட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக வனவளத் திணைக்களம் எல்லைக்கற்களை இட்டுள்ள அத்தனை காணிகளும் எமது தமிழ் மக்கள் பயன்படுத்திய காணிகளாகும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கொக்குளாய், கொக்குத்தொடுவாய், ஒதியமலை போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடந்த 30 வருட காலங்களுக்குமேலாக தமது இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து வெளியிடங்களில் குடியேறியிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் வாழ்ந்த எமது மக்களின் காணிகள் காடுகளாக காட்சி தருகின்றன. குறித்த தமிழ்மக்களுக்குரிய காணிகளுக்கு தற்போது வனவளத்திணைக்களம் தனது எல்லைக்கற்களையிட்டுள்ளது.

இவ்வாறு நிலைமைகள் இருக்கும்போது வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய காணிகளுக்கு எல்லைகளை இடும்போது, பிரதேசசெயலரிடமோ, கிராமசேவகர்களிடமோ அல்லது காணிகளுக்குரிய மக்களிடமோ அனுமதிகளைப்பெற்றார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

மேலும், வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய காணிகளுக்கு எல்லைக்கற்களை இடும்போது காட்டும் அக்கறையினையும் வேகத்தினையும், எல்லைக்கற்களை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணமுடியவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24