(சசி)

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் சிறிய உடைவொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பயணிக்கும் மக்கள் அவதானமாக செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கல்லடிப் பாலம் அல்லது லேடி மெனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தின் ஒரு சிறிய பகுதி உடைந்து விழுந்துள்ளது.

 இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைமாவட்டத்திற்கு செல்ல இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலத்தின் இரு மருங்கிலும் மீன்களின் சத்தங்களை (பாடும் தேன்நாடு) கேட்கக் கூடியதாக இருக்கும்.

சேர் வில்லியம் ஹென்றி மெனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது.

 மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் குறுகின்றமை குறிப்பிடத்தக்கது.