கடந்த ஆண்டு மறைந்த 'பாடும் நிலா' எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு தளங்களில் சாதனை புரிந்த நாயகர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 15-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை புரிந்தவர் 'பாடும் நிலா' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். 

கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்த இவருக்கு இந்த ஆண்டிற்கான பத்மவிபூஷண் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எஸ் பி பாலசுப்ரமணியம் இதற்குமுன் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய  விருதுகளை வென்றிருக்கிறார்.

சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்திற்கு இன்றும் ரசிகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் பத்ம விருதுகளையும் வென்ற எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை இணையதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.