மட்டக்களப்பு தாளங்குடாவில் 56 வயதுடைய  ஆண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய மகனை எதிர்வரும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏல்.எம். றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

தாளங்குடா 2  ஆம் பிரிவு பெரியதம்பிரான் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் என்பவர் கட்ந்த 22 ஆம் திகதி வீட்டில் நிலத்தில் வீழ்ந்தபோது கல்லில் அடிபட்டு  படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். 

இதனையடுத்து சட்டவைத்தியர் பிரோத பரிசோதனையில் வீழ்ந்ததில் அடிபட்ட காயம் அல்ல என சந்தேகம் கொண்டு சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிசாருடன் சட்டவைத்தியர் சென்று பார்வையிட்டு இது கட்டை ஒன்றினால் தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அம்பலாந்துறையில் திருமணம் முடித்துள்ள 38 வயதுடைய மகனுக்கும் தந்தைக்கும் அடிக்கடி சண்டை இடம்பெற்று வந்துள்ளதாகவும் சம்பவதினம் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் தந்தையை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (25) சந்தேகத்தில்  கைது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எல்.எம் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.