மட்டக்காப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் இன்று செய்வாய்கிழமை (26) இடம்பெற்ற  விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கிறிஸ்டியன் வீதி பெரியகல்லாற்றைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 36 வயதுடைய கீர்த்தி டானியல் ஸ்ரீகாந் என்பவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீதியின் ஊடாக மண் ஏற்றுவதற்காக கென்டர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பிரதான வீதியில் இருந்து சிறிய வீதியை நோக்கி செல்ல முற்பட்டபோது வீதியின் குறுக்கே நின்ற மரமொன்றின் கிளையில் மோதியதால் கண்ணாடியை உடைத்து சென்ற மரக்கிளை சாரதியின் நெஞ்சுப்பகுதியில் குத்தியதால் குறித்த நபர் தளத்திலே பலியாகியுள்ளார்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கு அமைவாக தளத்திற்குச் சென்ற மண்டூர் பிரேதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த சடலம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.