மூன்று மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி இரவு நேர கடுகதி ரயில் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான  இரவு நேர கடுகதி ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த இரவு நேர கடுகதி ரயில் சேவை மீண்டும் நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பிற்கான முதலாவது புகையிரதம் புறப்பட்டுச் சென்றது. 

நேற்று இரவு 8.15 மணிக்கு புறப்பட் புகையிரதம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தைச் வந்தடைந்தது.

சுகாதார நடைமுறைகளைப் பேணி பயணிகளின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உடல் வெப்ப நிலை  பரிசோதனை செய்யப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகல் நேர ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து தினமும் வழமை போன்று மாலை 5.10 க்கும்,  இரவு 8.15 க்கும், காலை 6.10 க்கும் ரயில் சேவை இடம்பெறுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.வை.நுபைஸ் தெரிவித்தார்.