கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைக் கிராம சேவகர் பிரிவு, நேற்று (25) பிற்பகல் 06 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

மாஞ்சோலைக் கிராமம் 11ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.