கொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..!

Published By: J.G.Stephan

26 Jan, 2021 | 01:43 PM
image

(செ.தேன்மொழி)
மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இனந்தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து  எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிடியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02