உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை என்பதுடன் வைரஸ் உருமாற்றம் அடையத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியே 22 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 21 இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.