குழந்தைப் பிரசவம் நிகழ்ந்து 14 நாட்களின் பின்னர் இளம் தாய் ஒருவர் தனக்கு ஏற்பட்ட திடீர் வருத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாக புத்தளம், கல்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார். 

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பலடி, நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 இரண்டாவது குழந்தை பிரசவம் நிகழ்ந்து 14 நாட்கள் கடந்த பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவரது மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக உடற்பாகங்கள் அரச இரசாயணப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுவரையில் திறந்த தீர்ப்பை வழங்கி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.