வெள்ளை மாளிகையில் குடியேறிய ஜோ டைனின் இரு நாய்கள்

Published By: Digital Desk 3

26 Jan, 2021 | 04:31 PM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் ஜேர்மன்செப்பட் வகை நாய்களான சேம்ப் மற்றும் மேஜர் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளன.

சேம்ப் ஒரு செங்கல் அடுப்பு உள்ள இடத்தில் தனது புதிய படுக்கையை அனுபவித்து வருவதாகவும், மேஜர் புல்வெளியில் ஓடுவதை விரும்புவதாகவும் முதல் பெண்மணியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேம்ப்  (Champ)

சேம்ப் வெள்ளை மாளிகைக்கு புதியதல்ல. பைடன் குடும்பம் 2008 ஆம் ஆண்டில் அந்த நாயை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தார்கள், அவர் துணை ஜனாதிபதியாக இருந்த இரண்டு காலப்பகுதிகளிலும் அவர்களுடன் தங்கியிருந்தது.

மேஜர் (Major)

மேஜர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பைடன் குடும்பத்தில் சேர்ந்தது. 2018 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம்  பைடன் டெலாவேர் ஹ்யூமன் அசோசியேஷனில் வளர்ந்து வந்த  மேஜரை தத்தெடுத்தார்.

மேஜர்  மீட்பு பணிகளில் கைதேர்ந்தது. ஜனாதிபதி மாளிகையில், முதன் முதலாக வசிக்கும் மீட்பு நாய் என்ற  சிறப்பையும், இது பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவீன யுகத்தில் பிராணிகளை வைத்துக்கொள்ளாமல் வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகள் கழித்த முதல் ஜனாதிபதி ஆவார்.

120 ஆண்டுகளில் ஒரு நாயைக்கூட வைத்திருக்காத வெள்ளை மாளிகையின் முதல் குடியிருப்பாளராகவும் ட்ரம்ப்ப இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு...

2024-03-01 14:09:45
news-image

காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த...

2024-03-01 12:40:56
news-image

தென் கொரிய மருத்துவ சங்க அலுவலகங்களில்...

2024-03-01 11:59:44
news-image

காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள்...

2024-03-01 11:11:59
news-image

பங்களாதேஸ் தலைநகரில் உணவகமொன்றில் பெரும் தீ...

2024-03-01 09:44:49
news-image

மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர்...

2024-02-29 17:05:46
news-image

லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல்-...

2024-03-01 09:09:29
news-image

காஸா பலி எண்ணிக்கை 30,000 ஐ...

2024-02-29 15:43:19
news-image

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய...

2024-02-29 12:15:05
news-image

உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை ...

2024-02-29 17:39:21
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு...

2024-02-28 11:29:02
news-image

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற...

2024-02-27 16:32:41