சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் நடைபெற்று வருகின்றது.

ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். எனினும் அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.