கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் சமூக வலைதள அமைப்பு  இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு காலிமுகத்திடலுள்ள ஆர்ப்பாட்ட பகுதியில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்ள் கறுப்புக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

படப்பிடிப்பு :- ஜே. சுஜீவகுமார்