இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ஏ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

திருநங்கைகளால் திறந்த சேவையை அனுமதிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளை கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்தார்.

இந் நிலையிலேயே திங்களன்று நடைபெறும் வெள்ளை மாளிகை விழாவில் புதிய பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கலந்துகொள்வதுடன், அங்கு நிர்வாக இந்த உத்தரவு கையெழுத்திடப்படும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் இந்த தடையுத்தரவு அதிகாரப்பூர்வமாக நீக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜோ பைடன், இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான தடையுத்தரவை இரத்து செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.