டயலொக் டெலிவிஷன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதியதொரு அங்கீகாரம்..!

Published By: J.G.Stephan

25 Jan, 2021 | 11:47 AM
image

டயலொக் டெலிவிஷன் Missed call இன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்துவதற்கான  அங்கீகாரத்தை வழங்குகின்றது.   

இலங்கையில் உள்ள Pay-TV தொலைக்காட்சி சேவைகளின் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் முன்னணி Pay-TV வலையமைப்பான டயலொக் டெலிவிஷன்  ஒரு தனித்துவமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு மொபைல் போன் வலையமைப்பிலும் இருந்து  தங்களுக்கு விருப்பமான எந்தவொரு தனி அலைவரிசையினையும் அல்லது அலைவரிசை பக்கேஜினையும் இலகுவாக missed call  மூலம் செயல்படுத்த உதவுகிறது.

இந்த புதிய சேவையுடன் வாடிக்கையாளர்கள் தங்களது டயலொக் டிவி கணக்கு பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் இருந்து  ஒரு மிஸ் கோலினை ஏற்படுத்துவதன் மூலம்  தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை அல்லது அலைவரிசை பக்கேஜினை எளிதாக செயல்படுத்த முடியும். டயலொக் மொபைல் இலக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட டயலொக் டிவி வாடிக்கையாளர்கள் 0760079XXX க்கு மிஸ் கோல் கொடுத்து தங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக்கொள்ளலாம்.

  இந்த சேவையைப் பெறுவதற்கு, நீங்கள் செயற்படுத்த விரும்பும் அலைவரிசையின் கடைசி 3 இலக்கங்களை ‘xxx’ க்கு மேலே குறிப்பிட வேண்டும் மற்றும் 100 க்கும் குறைவான எண்களில் ஆரம்பமாகும் அலைவரிசைகளை செயற்படுத்தும் போது அலைவரிசை இலக்கத்திற்கு முன் பூஜ்ஜியத்தை பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு டயலொக் டிவி வாடிக்கையாளர் தங்கள் அலைவரிசை பட்டியலில்   Ten Cricket (அலைவரிசை இலக்கம் 69) அலைவரிசையினை செயல்படுத்த விரும்பினால் 0760079069 க்கு மிஸ் கோலினை கொடுத்து இந்த அலைவரிசையினை செயற்படுத்தக்கொள்ளக்கூடியதுடன், அலைவரிசை பக்கேஜ்களை செயற்படுத்த இதே முறையினையே பின்பற்ற வேண்டும். செயல்படுத்தப்பட்ட அலைவரிசை பட்டியல்களுக்கான மாதாந்த கட்டணம் வாடிக்கையாளரின் கட்டணத்துடன் இணைக்கப்படும்.

டயலொக் டெலிவிஷனின் வியாபார பிரிவு தலைவர் சிரந்த டீ சோய்சா கருத்து தெரிவிக்கையில் "வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பப்படி ஒரு அலைவரிசையினை அல்லது அலைவரிசை பக்கேஜினை இலகுவாக மிஸ் கோலின் மூலம் செயற்படுத்த சமீபத்திய எளிதான முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் முதன்முறையாக. வாடிக்கையாளருக்கு அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும், பார்க்கும் அனுபவத்தின் கால அளவையும் தீர்மானிக்க முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதுடன்  இது ஒரு அலைவரிசையை  மிகவும் எளிதாகவும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுத்தும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது” என தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் 1777 க்கு அழைப்பினை ஏற்படுத்தவதன் மூலம் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். மிஸ் கோல் சேவையின் மூலம் உங்களுக்கு விருப்பமான அலைவரிசையினை செயற்படுத்திக்கொள்ளக்கூடியதுடன் நீங்கள் SMS ஊடாக  679 க்கு அழைப்பினை ஏறபடுத்தி உங்களுக்கு பிடித்த அலைவரிசையினை எங்கள் குரல் சேவை (IVR) மூலமும்  MyDialog App அல்லது dialog.lk ஊடாகவும் செயல்படுத்தலாம். மிஸ் கோல் சேவையின் மூலம் விரும்பிய அலைவரிசையினை  செயல்படுத்த, வாடிக்கையாளரின் டயலொக் டெலிவிஷன் கணக்கு செயற்படும் நிலையில்  இருக்க வேண்டும் என்பதும்  போதுமானளவு கணக்கு மிகுதியும் காணப்படுதல் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54