பாணந்துறை, பள்ளிமுல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழு மீதே மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் பாணந்துரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை, பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் பாணந்துறை - வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.