இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன

Published By: Vishnu

25 Jan, 2021 | 10:49 AM
image

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு தடுப்பூசி வெளியீடு இருந்தபோதிலும், அதிகரித்து வரும் கொரோனா நோயார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இஸ்ரேல் மூன்றாவது முடக்கலுக்கு மத்தியில் உள்ளது.

இந் நிலையில் முடக்கல் உத்தரவுகளை மீறி திறக்கப்பட்ட மத பாடசாலைகளை பொலிஸார் மீண்டும் மூடுவதற்கு முயன்றதால் ஜெருசலேம் மற்றும் அஷ்டோடில் மோதல்கள் வெடித்தன.

பல பெரிய அதி-ஆர்த்தடாக்ஸ் யூத பிரிவுகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பாடசாலைகளை தொடர்ந்து திறந்து, ஜெப ஆலயங்களில் பிரார்த்தனை செய்து, வெகுஜன திருமணங்களையும் இறுதிச் சடங்குகளையும் நடத்தியுள்ளன.

குறிப்பாக ஜெருசலேமில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வெளியே நூற்றுக்கணக்கான அதி-ஆர்த்தடாக்ஸ் குடியிருப்பாளர்கள் கூட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பிரயோகம் கொண்டு தாக்கியும் உள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது கோபடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை, இங்கிருந்து வெளியேறுங்கள் நாஜிக்கள் என்று அழைத்து குப்பைகளை அவர்கள் மீது வீசியும் அவமதித்துள்ளனர்.

இந்த மோதலில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன், குறைந்தது நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவத்தனர்.

இஸ்ரேலில் 593,961 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதனால் 4,341 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-02 18:51:38
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07
news-image

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க...

2023-10-01 13:04:10
news-image

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக சீன ஆதரவு...

2023-10-01 07:23:16
news-image

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல்: இந்திய -...

2023-10-01 09:23:12
news-image

அமைச்சராக ஒன்ராறியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி...

2023-09-30 20:09:56
news-image

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில்...

2023-09-30 13:23:11
news-image

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி

2023-09-30 10:40:54
news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08