பாணந்துறை, பின்னவத்தை பகுதிகளில் சுமார் 40 கிராம் ஹெரோயின் பக்கெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார்.

நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதான சந்தேக நபரை இன்றைய தினம் பாணந்துரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.