ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டாரவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

பாராளுமன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆறாவது உறுப்பினர் இவர் ஆவார்.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தயாசிறி ஜயசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.