நாட்டில் இன்று காலை 6.00 மணிமுதல் புதிதாக பல பகுதிகள் கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கண்டி, பூஜாபிட்டிய சுகாதாரப் பிரிவில் உள்ள பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம சேவகர் பிரிவு.

அம்பலாந்தோட்டையில் உள்ள 140 போலானா தெற்கு கிராம சுகாதாரப் பிரிவுக்குள் உள்ள மெல்கொனிய கிராமம் ஆகிய பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மாலை 6.00 மணி முதல் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் நசீர் தோட்டம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளின் வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்த வீதிகளுக்கு உட்பிரவேசிக்கும் பிரதேசங்களும், மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கல்லொழுவ கிழக்கு மற்றும் கல்லொழுவ மேற்கு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டது.

அதேநேரம் மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கல்லொழுவ பிரதேசத்தின் ஜும்மா பள்ளிவாசல் வீதி, ஹித்ரா மாவத்த, புதிய வீதி மற்றும் அகரகொட ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணிமுதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்தது.