சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் புது படத்தில் காதலிகளை குற்றம் சொல்லும் வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதியுள்ளார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிம்பும் வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர். 

சிம்பு அவரது பாணியில் வழக்கம் போல் காதலிகளை குற்றம் செல்லும் வகையில் இரு பாடலை அமைத்துவிட்டு, நியூ ஏஜ் லவ் பாடல் ஒன்று அமைத்து இருக்கிறோம் என்று பெருமையாக கூறியுள்ளார். 

அந்த பாடலின் தொடக்க வரிகள்:-

என்னை விட்டு

யாரையாச்சும் நீ

கல்யாணம் தான்

பண்ணிக்கிட்டா ..

கொன்னே புடுவேன்

உன்னை நான்

கொன்னே புடுவேன்…

இவ்வாறு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதியுள்ளார். இதையும் இளைஞர்கள் ரசிப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.