இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல் 

Published By: Digital Desk 4

24 Jan, 2021 | 08:31 PM
image

(ஆர்.யசி)

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில்  உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுடிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கப்பல் மீட்கப்பட்டது.

கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக்கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி  அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன்  கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டுல்லத்தை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும் இன்று பிற்பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு குறித்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர்.

எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் முயற்சியில் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது கண்டறிந்துள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.  

எவ்வாறு இருப்பினும் கப்பலை நகர்த்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துவந்த நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் கப்பலை நகர்த்தியுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08