கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 பரவல் தடுப்பு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பகுதிகள் இன்று (24) மாலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து அவை விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகள் வருமாறு,

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் நசீர் வத்த பகுதி இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பன்சல வீதி, கத்தொட வீதி மற்றும் நிந்ரா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கும் பகுதிகளும் இன்று மாலை 6 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

அத்துடன் மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்ஒலுவ கிழக்கு மற்றும் கல்ஒலுவ மேற்கு பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று மாலை 6.00 மணிமுதல் மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூம்மா மஸ்ஜித் மாவத்தை, நிந்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகரகொட ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.