கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 423 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk

அதன்படி, இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49,684ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் 349 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.