வடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..? Published by Loga Dharshini on 2021-01-24 16:31:58 தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு - கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tags தமிழ் மக்கள் வாழும் பகுதி வாழ்வுரிமை பாதுகாப்பு கலந்துரையாடல் தமிழர் தரப்பு