வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஹேரத் (வயது 35) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறையில் தனது ஊரான குருணாகல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதியே பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.