வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனமொன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து மின் கம்பம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரகவாகனம் புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் கனரக வாகனமும், மின் கம்பமும் சேதமடைந்ததுடன்,  விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் அப் பகுதிக்கான மின் விநியோக நடவடிக்கையை விரைந்து துண்டித்தமையினால் அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.