அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதங்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் கல்வி ஆசிரியர் மற்றும் பொலிஸ் கான்ஷ்டபிள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி-மீட்டியாகொட பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை கைத்துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்துடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அவர் ஹிக்கடுவ, கோனபினுவலவில் வசிக்கும் ஒரு கல்வி ஆசிரியரிடமிருந்து தனியாங்கி கைத்துப்பாக்கியை பெற்றதாக தெரியவந்தது.
அதற்கமைவாக கல்வி ஆசிரியரும் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
குறித்த கான்ஷ்டபிள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது அங்கு அவர், துப்பாக்கியை திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபிள், ஆசிரியர் உள்ளிட்ட மூவரை பலபிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM