மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே 2021 அவுஸ்திரேலிய ஓபனில் போட்டியிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஃபெடெக்ஸ் ஏ.டி.பி தரவரிசையில் இப்போது 123 வது இடத்தில் உள்ள முர்ரே, மெல்போர்னுக்கு ஒரு பட்டாய விமானத்தில் பயணிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியள்ளதாக ஜனவரி 14 ஆம் திகதி அறிவிப்பு வெளியானது.

33 வயதான ஆண்டி முர்ரே கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிக்காட்டாத நிலையில் ஆஸ ஓபனில் போட்டியிட முடியும் என்று நம்பினார்.

ஆனால் அவுஸ்திரேலிய ஓபன் அமைப்பாளர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக தொடலிருந்து விலகியுள்ளார்.

பிரிட்டனில் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் உள்ள முர்ரேவுக்கு ஆஸி தொடருக்காக பங்கெடுப்பதற்காக மெல்பேர்னுக்கு சென்றாலும், அங்கு அவர் மேலும் 14 நாள் தனிமைப்படுத்தாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறான நிலையில் கால அவகாசம் குறைவாகவுள்ளமையினால் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.