பல சட்ட அமுலாக்க முகமைகளை உள்ளடக்கிய ஒரு பாரிய நடவடிக்கையின் விளைவாக காணாமல்போன கிட்டத்தட்ட பல சிறுவர்கள் அமெரிக்காவின், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் பலர் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனித கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டினார்.

எனினும் கைதுசெய்யப்பட்டவரின் விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இந்த பாரிய சோதனை நடவடிக்கையானது ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட எட்டு சிறுவர்கள் உட்பட 33 பேர் அடங்கியுள்ளதாகவும் எஃப்.பி.ஐ கூறியுள்ளது.