வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.

மாலை 7.12 மணிக்கு தலதா மாளிகை வளாகத்தில் இருந்து தெற்கு திசையில் பயணத்தை ஆரம்பிக்கும் கும்பல் பெரஹரா தலதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து  ரஜ வீதியினூடாக மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும்.

இதேவேளை, பெரஹரா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 500 பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.