பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை நேர்காணல் செய்வதில் உலகளவில் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிபரப்பின் மாபெரும் லாறி கிங் தனது 87 ஆவது வயதில் காலமானார்.

கிங் தனது ஆறு தசாப்த கால வாழ்க்கையில் 50,000 நேர்காணல்களை நடத்தியுள்ளார்.

இதில் பிரபலமான சிஎன்என் பேச்சு நிகழ்ச்சியான லாரி கிங் நேரலை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ நிலையத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என்று அவர் இணைந்து நிறுவிய தயாரிப்பு நிறுவனமான ஓரா மீடியா தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் சமீபத்திய ஆண்டுகளில் மாரடைப்பு உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

"63 ஆண்டுகளாக மற்றும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் தளங்களில், லாரியின் பல ஆயிரம் நேர்காணல்கள், விருதுகள் மற்றும் உலகளாவிய பாராட்டுகள் ஒரு ஒளிபரப்பாளராக அவரது தனித்துவமான மற்றும் நீடித்த திறமைக்கு ஒரு சான்றாக நிற்கின்றன" என ஓரா மீடியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.