கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் கையை விட்டுப்போகாது: பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கின்றேன் - ஜனாதிபதி

Published By: J.G.Stephan

23 Jan, 2021 | 04:45 PM
image

(ஆர்.யசி)
இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவை சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன. துறைமுக அபிவிருத்தி விடயங்களில் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றனர். இதேபோன்று தான் எம்.சி.சி ஒப்பந்தம் குறித்த சிக்கல்கள் எழுந்த வேளையில் குழுவொன்றை அமைத்து குறித்த ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளை ஆராயவும் எனக்கு அறிவிக்கவும் வலியுறுத்தினேன். இந்த விடயங்களை ஆராய்ந்த குழு, எம்.சி.சி ஒப்பந்தம் மோசமானது எனவும் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் கூறினார்கள். எனவே இந்த நிலைமைகளை அமெரிக்காவிற்கு அறிவித்து அவர்கள் முன்வைத்த முறைமைக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாது என அறிவித்தோம்.

 அவர்களின் ஒப்பந்தத்தில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம். இன்று நாட்டில் எம்.சி.சி பிரச்சினை இல்லை. அதனை நாம் நிறுத்திவிட்டோம். இப்போது இது குறித்து எவரும் எதுவும் பேசுவதில்லை. அதேபோல் தற்போது எழுந்துள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்த உடன்படிக்கை, முன்னைய ஆட்சியில் ஜனாதிபதி, இந்திய பிரதமர் இருவருக்கும் முன்பாக அப்போதைய அமைச்சர் சாகல ரத்நாயக இந்திய பிரதிநிதிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்று உள்ளது. நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கைகளை செய்ய மாட்டேன் என தூக்கி எரிய முடியாது. அவ்வாறு செய்தால் தவறான எண்ணக்கருவொன்று உருவாகும். ராஜபக்ஷக்கள் அனைத்தையும் சீனாவிற்கே கொடுப்பார்கள் என கூறப்படும். இது முறையானது அல்ல. நாம் எந்த நாட்டுடனும் தொடர்புபட்டு செயற்படவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22