(செ.தேன்மொழி)
சிறைக்கைதிக்கு தொலைபேசி வழங்கியமை தொடர்பில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கைதியொருவரிடமிருந்து மீட்கப்பட்ட தொலைபேசி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கைதி தனக்கு சிறைச்சாலை அதிகாரியொருவரே தொலைபேசியை வழங்கியதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியல் சிறைச்சாலையின் ஆணையாளரின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM