இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விரேந்திர ஷேவாக், அவுஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியந்து போயுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரை நிறைவுசெய்துகொண்டு இந்திய அணி நாடு திரும்பியது.

அந்த அணியை சேர்ந்த தமிழக வீரரான நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இது குறித்து விரேந்திர ஷேவாக் தனது டுவிட்டரில், இது தான் இந்தியா! இங்கே கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. எங்களுக்கு கிரிக்கெட் அதுக்கும் மேல.

நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன ஒரு அற்புதமான கதை அவருடையது என ஷேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய அணி வீரர் நடராஜன் வண்டியொன்றில் வலம் வரும் வீடியோவையும் ஷேவாக் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.