தினமும் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் மூலக்கூறு ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது எனவும் இது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

42 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் 2 வாரங்களிலேயே 12 சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கின்றது.