இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Published By: Digital Desk 4

22 Jan, 2021 | 09:46 PM
image

கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரவுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ந.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லை தாண்டிய மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வடகடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லையைத் தாண்டும் மீனவர்களை கடற்ப்படை கைது செய்து வருகிறது, இது வரவேற்கத்தக்கது. கைது நடவடிக்கை தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கை.

இலங்கை கடற்ப்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளை எமது கடற்ப்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.

சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்பரப்புக்குள் நுளைந்து எமது வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது. கறுப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ளது அடாவடி அதனை நாம் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01