இந்தியாவில் சென்னையில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இலங்கையை சேர்ந்த இரண்டு நபர்களை  பொலிசார் கைது செய்துள்ளனர். 

இலங்கையைச் சேர்ந்தவர்களான இவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை மறைத்து, கடவுச்சீட்டு இல்லாமல் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் தூத்துக்குடி அருகே இலங்கை படகில் இருந்து 100 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

18 கிலோ மெத்தபெட்டமைன், துப்பாக்கிகளும் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு மாத கால விசாரணையைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.