இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடைகளின் உள்நாட்டு தயாரிப்பு வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature) தமது புதிய இரண்டு காட்சியறைகளை சிலாபம் மற்றும் கொழும்பு – 3 மரினோ மோல் இல் திறந்து வைத்ததனைத் தொடர்ந்து நாடு முழுவதுமான விஸ்தரிப்பினை மேற்கொள்கிறது.
சிலாபத்தில் திறந்து வைக்கப்பட்ட சிக்னேச்சர் (Signature) காட்சியறையானது இல. 54, புத்தளம் வீதி, சிலாபம் எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மரினோ மோல் இல் உள்ள காட்சியறையானது தரைத்தளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய காட்சியறைகளுடன் மொத்தமாக எட்டு காட்சியறைகளை சிக்னேச்சர் (Signature) கொண்டுள்ளது என்பதுடன் தமது இன்னுமொரு புதிய காட்சியறையினை இம் மாதத்தில் பாணந்துறையில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புதிய காட்சியறையானது நவீன ஆடையலங்காரங்களை விரும்பிடும் ஆடவர்களுக்கான நவநாகரீக, உயர்தரத்திலான, வைபவ ஆடைகள், ஸ்மார்ட் கசுவல் (Smart Casual), கசுவல் (Casual), லினென் (Linen), சூட்கள் (Suits), சேர்ட்கள் (Shirts), பிளேசர்கள் (Blazers) மற்றும் காற்சட்டைகள் (Trousers) போன்றவற்றை பாரிய தெரிவுகளிலான தயாரிப்புக்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளக்கூடிய வசதியை வழங்குகிறது.
இந்த காட்சியறையினூடாக, லெதர் (leather) தயாரிப்புகள் மற்றும் ஆடவர் அணிகலன்கள் போன்றவற்றை தமது புதிய கொள்வனவுகளுக்கு பொருத்தமான வகையில் இங்கு தெரிவு செய்து கொள்ளவும் முடியும்.
விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு வசதியான சூழலை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், பரந்தளவு தெரிவுகளை இலகுவாக தெரிவு செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய காட்சியறையில் Signature மற்றும் Le Bond உள்ளடங்கலாக அனைத்து முக்கிய வர்த்தக நாமங்களும் கிடைக்கப்பெறுகின்றன. அத்தோடு இங்கு Signature Studio மூலமாக Made-to-Order (MTO) மற்றும் Made-to-Measure (MTM) ஆகிய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
Made to Order (MTO) ஊடாக வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான ஆடைகளை 200க்கும் அதிகமான தெரிவுகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
துணிகள், அளவுகள் மற்றும் பொருத்துகைகள் (fit) போன்றன தெரிவுகளில் அடங்கியுள்ளன. Made to Measure (MTM) ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தமது ஆடைகளின் அளவுகளில் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும் என்பதுடன் சிலாப காட்சியறையில் பெண்களுக்கான ஆடைத் தெரிவுகளும் இதர வர்த்தக நாமத் தெரிவுகளும் காணப்படுகின்றன.
இப்புத்தாண்டு பிறப்புடன் மேலும் அதிகமான உயர் தரத்திலான, நவநாகரீக ஆடையணிகலன்கள் இப்புதிய காட்சியறைக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் தற்போது இருக்கும் நவநாகரீக ஆடைகளை கொள்வனவு செய்து தங்கள் ஆடைத் தேர்வுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
Signature வர்த்தக நாம முகாமையாளர் அம்ஜாத் ஹமீத் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
“சிலாபத்தில் Signature இன் புதிய காட்சியறையான Signature-X இனை திறந்து வைத்ததன் மூலமும் மரினோ மோலில் Signature Store இனை திறந்து வைத்ததன் மூலமும் இலங்கையின் மிகவும் நம்பிக்கையை வென்ற இளைஞர் வர்த்தக நாமம் என்ற எமது நிலையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
கொழும்பிலும் கொழும்புக்கு வெளியேயும் புதிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய காட்சியறைகள் மூலம் எமது வர்த்தக நாமங்களுக்கு வாடிக்கையாளர்களை நன்கு அணுகிட முடியும். மேலும் இது Signature இனை புதிய வாடிக்கையாளர் மத்திக்கு நெருக்கமாக கொண்டு செல்ல உதவுவதனால் வர்த்தக நாமத்தினை மேலும் மேம்படச் செய்திடும்.
இவ்விரண்டு புதிய காட்சியறைகளை திறந்து வைத்ததன் மூலமும் அண்மையில் திறக்கப்படவிருக்கும் பாணந்துறை காட்சியறையுடனும் பல்வேறு நகரங்களில் உள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு இதனை கொண்டு சென்று, நாடு தழுவிய வர்த்தக நாம விழிப்புணர்வினை ஏற்படுத்தி, இலங்கையில் Signature சந்தையினை விஸ்தரித்திடும் எமது திட்டத்தில் நிலையான வளர்ச்சியினைக் காண்கின்றோம்.
எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர் தளத்திற்கு வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட, நவநாகரீக ரீதியாக முன்னோடியாகவுள்ள, உயர் தரமான சேவைகளை வழங்கிடும் எமது இலக்கினை அடைந்திடும் வகையில் 2021ஆம் ஆண்டில் தொடர்ந்தும் பல புதிய காட்சியறைகளை திறக்கவுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Signature, வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கான பெறுமதியினை வழங்கும் வர்த்தக நாமமாக திகழ்கின்றது.
இலங்கையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற ஆடவர் வர்த்தக நாமமாக இது திகழ்கின்றது. இளம் தலைமுறையினர் மத்தியில் தனித்துவமான மற்றும் நேர்த்தியான நவநாகரிக தோற்றத்தை கட்டியெழுப்புவதில் புகழ்பெற்றுள்ளதுடன், ஆடவர்களுக்கான பரந்தளவு ஆடைத் தெரிவுகளை கட்டியெழுப்பியுள்ளது.
எதிர்காலத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திகழும் கனவுடன் காணப்படும் இளம் பட்டதாரிகள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட முகாமையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Signature ஆடைத் தெரிவுகளையும் வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM