சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெடர்ந்து தெரிவிக்கையில்.
இலங்கை அரசுடைய தொடர் நடவடிக்கையாக காணி நிலம் அபகரிப்பு அதே போர்வையிலே இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகள். தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.
இதற்கு நிச்சயமாக எங்களுடைய தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை, திருகோணமலை மாவட்டத்தில் கண்ணியா வெண்ணீர் ஊற்று பிரச்சினை அதே போன்று திருகோணமலையில் எல்லைக் கிராமமாகிய தெண்ணைமரவாடியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிரச்சினைகள் அதே போன்று வவுனியா, மன்னார் மாவட்டத்திலே பல பிரச்சினைகள் இருக்கின்றன.
நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை.
மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்.
எங்களுக்கு இன மத வெறி இல்லை நீங்கள் சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதால்தான் நாங்களும் எதிர்க்கின்றோம். தென்னிலங்கையிலே அவர்களுக்கு ஆட்சி சரிவு ஒரு வருடத்தில் வந்துவிட்டது.
பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள் அவர்களுக்கு அங்கு என்ன வேலை.
தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.
அங்கே யாழ்ப்பாண - கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். எனக்கு தகவல் அங்கிருது வந்ததும் உடனடியாக அங்கு சென்றபொழுது வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸ் நின்றார்,
ஊடகவியலாளர்கள் நின்றார்கள் அத்தோடு ஒரு சில பொதுமக்கள் நின்றார்கள். அவருக்கு சிங்கள மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு.
அத்தோடு கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள் கிடங்கு ரீ வடிவில் ஆளமாக வெட்டப்பட்டிருந்தது உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது அதுக்குள் எதையாவது கொண்டுவந்து புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் இதே போன்று தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM